புதன், 23 டிசம்பர், 2009

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்-க்கு அஞ்சலி

புரட்சி தலைவா வெற்றி உனக்கே     அழகிய தமிழ் மகன் நீயே


உங்கள் கணக்கில்
வரவு வைத்திருக்க வேண்டிய
வசந்தங்களை எல்லாம்
வறுமை...
விரட்டியடித்திருக்கிறது.

உங்கள் இளமைக் காலத்தின்
எண்பது சத வீதத்தை...
விதி...
வீணாக்கி இருக்கிறது.


உங்கள் கனவுகளுக்குக் கூட
மறுக்கப்பட்டது களம்.

கடவுள் மீதான நம்பிக்கையை நீங்கள்
கவிழ்த்துப் போடும் அளவுக்கு

உங்களைப் பந்தாடியிருக்கிறது
கடந்த காலம்.

பெரிய பெரிய திறமைகளை வைத்துக் கொண்டே

சின்னச் சின்ன வாய்ப்புகளுக்கும் கூட
நீங்கள்..
'பகீரதப் பிரயத்தனம்'
செய்ய வேண்டியிருந்தது.- - -

உங்கள் துவக்கப் பாதைகளில் எல்லாம்
தூவப்பட்டன அவமான முட்கள்.

உங்கள் கலைப் பயணத்தின்
பாதித் தூரம் வரைக்கும்
'சூழ்ச்சி'யெனும் தடைக் கற்கள்.

பாவம்....
உங்கள் 'மன வலிமை'யை
அவை உணரத் தவறின.

தடைக் கற்கள்-
உங்கள் கால்களுக்கும்

அவமானங்கள்-
உங்கள் மனதுக்கும்
உலுக்க முடியாத உறுதியைத் தந்தன!

ஏளனங்கள் எல்லாம்
உங்களை
ஒரு வேழமாய் மாற்றின!

எதிர்ப்புகள் எல்லாம்
உங்கள்
ஏணியாய் உயர்ந்தன!

ராமச்சந்திரன்
முகவரி தேடி வந்து
வட்டியும் முதலுமாக
அதிசயங்கள் நிகழ்த்த ஆரம்பிக்கிறாள்
அதிர்ஷ்ட தேவதை!

'ஒரு போதும் தோற்காது உண்மை உழைப்பு' என்று...
உங்கள் வெற்றி வாழ்க்கை
விளக்கு ஏந்தி வந்து
விளக்கம் சொல்கிறது.- - -

'யாம் பெற்ற துன்பம்
இரு மடங்காக
யாம் காண்பவர் எல்லாம் பெறுக...'
என்று அலையும்
சேடிஸ்ட்டுகள் செறிந்த உலகில்...

'யாம் பெற்ற துன்பம்
இனி யாருக்கும் வேண்டாம்' என்று
சத்துணவு தந்தீர்கள்.

இல்லாதவரை எல்லாம் தேடிப் பிடித்து
அவர்கள் தேவைள் படித்தறிந்து
அதனிலும் மேலாக
அள்ளித் தந்தீர்கள்.

போனால் போகட்டும் என்று கொடுத்தால் கூட
அளந்து கொடுக்கின்ற சிறிய உலகில்
கணக்குப் பார்க்காமல் வாரிக் கொடுத்தது
கண்டிக் கர்ணனின் 'பெரிய' மனம்.- - -

உங்களைப் பழித்தவர்களாக இருந்தாலும்
அவர்கள் ஒடிந்து நின்ற காலங்களில்
ஓடிப் போய்
உதவியிருக்கிறீர்கள்.

ஆரம்ப காலங்களில் உங்கள்
கைக்கு எட்டிய வாய்ப்புகளை...
வாய்க்கு எட்டாமல்
தட்டி விட்டவர்கள்...

பின்பு..வாழ்ந்து கெட்டு
உங்கள் வீட்டுக் கதவை வந்து தட்டிய போது...
உங்கள் மனக் கதவையும்
அகலமாகவே அவர்களுக்காக
திறந்து வைத்தீர்கள்.- - -

இறப்பு என்பது...
இயற்கையின் நிஜம்.
ஆனால்...என்னைப் பொறுத்தவரையில்...
இந்த மரணம்
உண்மைக் கலப்பற்ற பொய்!


- யாழ் சுதாகர்



      தமிழன் இல்லாத நாடில்லை
    தமிழனுக்கென்று ஒரு நாடில்லை
   நீ இருந்திருந்தால் கிடைத்துருக்கலாம்

"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே.....! - மகாகவி பாரதியார்

எல்லாம் எனக்குள் இருந்தாலும்

என்னை தனக்குள் வைத்திருக்கும்

அன்னை மனமே என் கோயில்

அவளே என்றும் என் தெய்வம் "

என்று நாங்கள் உணர

துணை நின்றவனே

உன் புன்னகையால்
பல உள்ளங்களை மகிழ செய்தவனே
நான் பொறியாளன்
ஆக பிள்ளையார் சுழியிடவனே
உன் புகழ் இந்த தமிழ் இனம்
உள்ளவரை வாழும்
.

கருத்துகள் இல்லை:

Buy Book Online in India
TheStorez.com Online Bookstore