வெள்ளி, 4 ஜூன், 2010

நான் என்ன செய்ய வேண்டும்

இன்று (4-06-2010) காலையில் CMBT பஸ் ஸ்டாண்டில் தாதான்குப்பம் செல்ல நின்று கொண்டிருந்தேன்.பொதுவாக அங்கு(தாதான்குப்பம்) சொகுசு பேருந்துகள் நிற்காது அனால் இன்று C70 ct எனும் பேருந்தில் ரோல்லிங் டிச்ப்லையில்வழி தாதான்குப்பம் என இருந்தது. நான் நடத்துனரிடம் தாதான்குப்பதில் பேருந்து நிற்குமா என்று கேட்டேன்.அதுக்கு அவர் (ஊருக்கு) புதுசா என கேட்டார். இல்ல பஸ் ல தாதான்குப்பம் நு போட்டிருக்கே அதன் கேட்டேன் என்று சொன்னேன். அதற்கு அந்த மாண்புமிகு நடத்துனர் பஸ்-அ முன்ன பின்ன பாத்துருக்கியா பஸ்லாம் நிக்காது கீழ இறங்கு என்றார்.
நான் உடனே அப்போம் எதுக்கு தாதான்குப்பம் னு போடுறீங்க னு சொன்னேன்.அவர் பேருந்தை நிறுத்தி செருப்பு பிஞ்சிடும் செவிடு பிஞ்சுடும் என சொல்லிட்டு சென்று விட்டார்.
பேருந்து நிறுத்தத்தில் நின்ற எல்லாருக்கும் நான் வேடிக்கை பொருளாகிவிட்டேன்.

நுகர்வோர் நீது மன்றத்தை நான் எப்படி நாடுவது.
ஏன் பஸ் ல போட்டுருக்க ஸ்டாப்பிங்குல நிறுத்த மாட்டுகாங்க
MTC ல புகார் தெரிவிக்க என்ன செய்ய வேண்டும்.

Time 8.10 to 15 at CMBT
BUS NO C70 ct
TN 01
N 8843

வெள்ளி, 12 மார்ச், 2010

வாழ்க்கை நெறிமுறைகள்

வாழ்க்கை நெறிமுறைகள்
* வணங்க வேண்டியவர்கள் - தாய், தந்தை
* மிக மிக நல்ல நாள் - இன்று
* மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு
* மிகவும் வேண்டாதது - வெறுப்பு
* மிகவும் வேண்டியது - பணிவு
* மிகப் பெரிய தேவை - சமயோசிதபுத்தி
* மிகக்கொடிய நோய் - பேராசை
* மிகவும் சுலபமானது - குற்றம் காணுதல்
* மிகவும் கீழ்த்தரமானது - பொறமை
* நம்பக்கூடாதது - வதந்தி
* ஆபத்தை விளைவிப்பது - அதிகபேச்சு
* செய்யக்கூடாதது - வீண் உபதேசம்
* செய்ய வேண்டியது - உதவி அன்பு
* விலக்க வேண்டியது - விவாதம்
* உயர்வுக்கு வழி - உழைப்பு
* நழுவவிடக்கூடாதது - நட்பு
* மறக்ககூடாதது - நன்றி

புதன், 10 மார்ச், 2010

அஜித்தின் கருணை நிறைந்த மனம்



உண்மையில் தல ஒரு நல்ல மனிதாபிமானம் கொண்டவர் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.


Source : http://www.starajith.com/media_display.php?id=1969

வியாழன், 11 பிப்ரவரி, 2010

இயக்குனர் பாலா ஒரு ....?



சமீபத்தில் அவன் - இவன் படத்தின் பிரஸ் மீட்டில் இயக்குனர் பாலா பேசிய பேச்சை கேட்ட பொது கொஞ்சம் எரிச்சல் வரத்தான் செய்தது.அப்படி என்ன சொன்னாருனா
நான் பொதுவா VCD யில் படம் பார்க்க மாட்டேன் . ஆனா தியட்டரில் போய் படம் பார்க்கும் போது முக்கியமான காட்சியில் செல்போனில் ப்செயகிட்டு இருப்பாங்க இல்லனா SMS அனுபிகிட்டு இருப்பாங்க . அதலாம் பக்கும் போது அவங்களா அடிச்சுடுவேனோ என தோணும் .


இதுல என்ன இருக்குனு நீங்க நிறைய பேரு நினைக்கலாம்.என்ன பொருத்தவரைக்கும் இது வடிகட்டின முட்டாள் தனமான செயல் . சம்பளம் தரும் முதலாளியே போன் பேசின அடிப்பேன்னு சொல்லுறது கிடையாது . காசு குடுத்து ஒரு மொக்க படத்த பாத்துட்டு உன்கிட்ட அடிவாங்கனுமா.நீ படத்த நல்ல எடுத்தா அவன் ஏன்டா SMS அனுப்ப போறான் இல்லனா போன் பேச போறான் .
யாராவது படைபாளிக்கு கோவம் வருவது சாதாரணம் என சொன்ன நீங்க ஹோட்டல் போய் சாப்பிட போறிங்க.அங்க உள்ள அதே படைப்பாளி ஏன்டா நான் கஷ்டப்பட்டு தோசை சுட்டு தரேன் நீ பாட்டுக்கு அத ரசிச்சு சாப்பிடாம போன் பேசிகிட்டு சாப்பிடுறியே என சொன்ன உங்களுக்கு கோபம் வருமா வராத [ அது கூட நம்ப உடல் நலம் சம்பந்தம்பட்டது ] .நீ இப்படிதான் படம் எடுப்ப என தெரிஞ்சு தான் படம் பாக்க வராங்க அப்பவும் படம் பிடிக்காதவன் தான் என்ன செய்யணு தெரியாம இப்படி செயுறான் .இல்லன எதாவது முக்கிய விஷயமா பேசுவாங்க அப்படியும் இல்லனா நண்பர்களுக்கு படத்துக்கு போயிராத மச்சினு SMS அனுபிகிட்டு இருப்பாங்க .

ஏங்க பாலா இதேமாதிரி நாங்களும் படம் புடிகலனா உங்கள (ஹீரோ ,டைரக்டர் ,etc ) என்னவேனுனாலும் பண்ணலாமா ? படம் மொக்கையா இருந்தா நஷ்டப்பட போறது நாங்களும் ,தயாரிப்பாளரும் இன்னும் கொஞ்சபேரும்தான், நிச்சியமா நீங்க இல்ல பாலா.

பொங்கலுக்கும் தீபாவளிக்கும் ரிலீஸ் பண்ண என் படம் கரும்போ பட்டாசோ அல்ல. நான் நினைக்கும் வித்த்தில் படம் வந்தால்தான் ரிலீஸ் செய்வேன் என்கிறார் இயக்குநர் பாலா.

இது பாலா ஒரு பேட்டியில் சொல்லியது.அதே மாதிரிதான் நாங்க படம் பிடிச்சுருந்த பாப்போம் இல்லனா SMS அனுப்புவோம்.



எதுக்கும் இந்த பதிவ படிச்சுபாருங்க


புதன், 3 பிப்ரவரி, 2010

நாஸ்காம் அவார்ட் 2010

நாஸ்காம் 2010 ஆம் ஆண்டிற்கான சிறந்த IT - ITES கம்பனிகளை அறிவித்துள்ளது .





The winners are:
1. Eka Software Solutions
2. ComViva
3. Wipro Technologies
4. Zoho Corporation
5. Tejas Networks
6. IBM Daksh Business Process Services Pvt Ltd
7. AirTight Networks
8. Tringme
9. RuralShores Business Services Pvt. Ltd




மூன்று கட்ட கடுமையான ஆய்வுக்கு பிறகு இந்த வெற்றியாளர்கள் அறிவிக்கபட்டுள்ளுதாக நாஸ்காம் தெரிவித்துள்ளது .

Comviva has won the Golden Peacock Innovation Award 2010 for its Mobile Internet Gateway Solution


திங்கள், 25 ஜனவரி, 2010

IND vs BAN 2nd test :டிராவிட் மற்றும் சச்சின் சதம் அடித்தனர்



* இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் டிராவிட் 29வது சதத்தையும் டெண்டுல்கர் 45வது சதத்தையும் அடித்தனர் .


* டெண்டுல்கர் 143 ரன்கள் எடுத்து அட்டம் இழந்தார்.




* டெண்டுல்கருக்கு இது 90வது சர்வதேச சதமாகும்.மேலும் டெண்டுகரும் திராவிடும் இணைந்து 17முறை 100+ அடித்துள்ளனர்.இது உலக சாதனையாகும் .


* டெண்டுல்கருக்கு பங்களாதேஷ்க்கு எதிராக 5வது (7 டெஸ்ட்களில் ) சதமாகும் திராவிட்டுக்கு 3வது (7 டெஸ்ட்களில் ) சதமாகும்.




* காம்பிர் வெஸ்ட் இண்டீசின் ரிச்சர்ட்ஸ் இன் தொடர்சியான 50 +(11 test) சாதனையை சமன் செய்தார் ஆனால் ஆஸ்திரேலியன் டான் பிராட்மனின்தொடர்சியான 6 டெஸ்ட் சதம் சாதனையை தவறவிட்டுவிட்டார் [2 வது இன்னிங்க்ஸ் இந்திய விளையாடுமா அப்படியே பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தாலும் அவர் 100 அடிபாரா என்பது சந்தேகமே ].



சாதனை புரிந்த மூவருக்கும் வாழ்த்துக்கள்




வெள்ளி, 22 ஜனவரி, 2010

டீலா நோ டீலா விளையாட வேண்டுமா








டீலா நோ டீலா விளையாட வேண்டும் என ஆசை படுகிண்றீர்களா
நீங்கள் செய்ய வேண்டியது இந்த லிங்க் -ஐ கிளிக் செய்து என்ஜாய் பண்ணுங்கள் .

வியாழன், 14 ஜனவரி, 2010

ஆயிரத்தில் ஒருவன் என் பார்வையில்




படத்தின் கதை ஒன்னும் புதியது கிடையாது . பல பிற மொழி படங்களிலும் பார்த்த அதே கதைதான் .
அனாலும் எடுத்திருக்கும் விதத்தில் செல்வராகவன் தன்னுடைய முத்திரையை பதித்திருக்கிறார் .
முதல் பாதியை ஜாலியாக எடுத்துள்ளார் .படத்தின் இடைவேளையை வித்தியாசமாக இருக்கு. ஒஹ் ஈச பாட்டில் மூலம் ரீமாசென்னின் மனது தெரிகிறது .அந்த பாட்டே தேவையில்லாத திணிப்பு போலத்தான் தெரிகின்றது .இரண்டாம் பாதி நன்றாக இருந்தாலும் ஏதோ ஒன்று குறைகின்றது .

படத்தின் பலம் :
பார்த்திபனின் நடிப்பு .
ரீமாசென் நடிப்பு .
கார்த்தி

படத்தின் பலவீனம்
பின்னணி இசை .
இராணுவத்தினர்/போலிசார் வரும் காட்சிகள் [ எந்த ஊருல சார் நினைச்ச நேரத்திற்கு ஒரு நட்டு ராணுவம் இன்னொரு நாட்டிற்கு போய் எல்லாரையும்கொன்னுட்டு கையேடு கொண்டுவந்த சரக்கை அடித்து கொண்டாடுவார்கள் ]

முதல் பத்து நிமிட காட்சிகளை நீங்கள் பார்கவில்லை என்றால் படம் உங்கள்ளுக்கு உறுதியாக புரியாது .



நெல்லாடிய நிலமெங்கே
சொல்லாடிய அவையெங்கே
வில்லாடிய களமெங்கே
கல்லாடிய சிலையெங்கே
தாய் தின்ற மண்ணே
தாய் தின்ற மண்ணே
இந்த பாடல் தான் கதையோடு வருகின்றது .படத்தின் ஆரம்ப காட்சிகளில் எம்.ஜி.ஆர் நம்பியார் லாம் வராங்க.



பார்த்திபன் பொய் என்ற வார்த்தைக்கு இணையான இன்னொரு வார்த்தை சொல்லுவர் (ரீமாசென்னிடம் )
அது என்ன என்று தெரிந்தால் சொல்லுங்கள் .

புதைகுழிகளை கண்டுபிடிக்க பாறையை உருட்டி விடுவதும் , நடராசர் நிழலில் ஓடுவதும் எதோ ஒரு அங்கில படத்தில் வரும் காட்சி என்று என் நண்பன் கூறினான் . அது எந்த படம் என்று தெரிந்தால் கூறுங்கள் .

சனி, 9 ஜனவரி, 2010

கமல் ரஜினி தான் மனிசங்களா ?

காலையில் படித்த /பார்த்த இரு செய்திகள் தான் இதை எழுத தூண்டியது .
அய்யா முதல்வரே
உங்கள்ளுக்கு இந்த ***** சினிமாகாரங்க கஷ்டபட்டா மட்டும் தான் கண்ணு தெரியுமா .மத்தவங்க எல்லோரும் எப்படி நாசமா போன உங்களுக்கு என்ன .தமிழ் நாட்டில் சினிமாகரர்களை தவிர அனைவரும் செல்வ செழிப்போடு வாழ்கின்றனர் என நீங்கள் நினைகின்றீர்கள் போலும் .
தமிழ் வழியில் படித்து மாநிலத்தில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு 1000 ரூபாய் பரிசு ஆனால் தமிழில் படத்திற்கு பெயர் வைத்தால் லட்சகணக்கில் வரிவிலக்கு .
ஒரு படத்தின் கதையை [ நடிகர் ரஜினிகாந்த் ஜக்குபாய் திரைப்படத்தில் தான் நடிக்க முடியாததைச் சொல்லும்போது,ரவிக்குமார் எனக்கு வாசபி என்ற பிரெஞ்சு படத்தின் டிவிடியைக் கொடுத்தார். அந்தக் கதை நன்றாக இருந்தது. சூப்பர் கதை. ஜக்குபாய் படம் நன்றாக ஓடும். ராதிகா கவலைப்பட வேண்டியதில்லை] திருடி படம் எடுத்த அந்த ***** படத்த திருட்டு vcd யில் விற்பனை செய்த காரணதிற்க ஒரு உயிர் தேவை இல்லாமல் போய்விட்டது .அதுக்கு காரணமான போலீசார் மீது என்ன நடவடிக்கையும் கிடையாது .ஆனா திருட்டு vcd விற்பனைசெய்பவர் மீது குண்டர் சட்டம் பாயும் . தப்பு செய்றவங்க மீது உடனடி நடவடிக்கை என்பது சந்தோஷமான செய்திதான் ஆனா அது ஒருதலை பட்சமாக இருக்கு . கதைய திருடி படம் எடுத்த அந்த மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்கமுடியுமா.

செய்தி 2
ஒரு SI உயிருக்கு போராடி கொண்டு இருக்கிறார் அதை இரு அமைசர்களும் பல அதிகாரிகளும் வேடிக்கை பார்க்கின்றனர் .மக்களே இதைப்பாருங்கள் .கண்முன் இறக்கும் ஒரு உயிரை காப்பாத்த இவர்களா நம்மை காப்பாத்த போகின்றார்கள் .என்ன கொடுமை தமிழா இது .

இன்னும் எத்தனைகாலம் தான்
ஏமாறுவோம் இந்த நாட்டிலே தமிழ் நாட்டிலே


.

வியாழன், 7 ஜனவரி, 2010

Birthday

செவ்வாய், 5 ஜனவரி, 2010

யார் சொன்னது பெண்கள் மட்டும் தான் அழகு என்று !!

யார் சொன்னது பெண்கள் மட்டும் தான் அழகு என்று !!
..
...
..
..
..
...
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..











ஆல்கஹால் : மனிதனின் மிக மோசமான எதிரி





Note: Fwd Mail

அசல் ஆடியோ வெளியீடு படங்கள் - ரசிகர்கள் கொண்டாட்டம்

அசல் படத்தின் திரைகதையை யூகி சேது மற்றும் சரண் அகிருடன் இணைந்து தலையும் எழுதியுள்ளார்.










நன்றி அஜித் பேன்ஸ்.காம்

Buy Book Online in India
TheStorez.com Online Bookstore