செவ்வாய், 19 மே, 2009

என் தலைவன் பிரபாகரனுக்கு சமர்பிக்கிறேன்

நான் செத்துப்பொழைச்சவன்டா...எமனைப்
பாத்து சிரிப்பவன்டா!
வாழைபோல வெட்டவெட்ட முளைச்சு
சங்குபோல சுடச்சுட வெளுத்து
வளரும் ஜாதியடா!...வந்தா
தெரியும் சேதியடா!

சிலுவையில் ஏசு மறைஞ்சாரு...மக்கள்
சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு!
குண்டுகள் போட்டு துளைச்சாங்க...ஆனா
காந்தியும் லிங்கனும் நிலைச்சாங்க!
சந்தனப்பெட்டியில் உறங்குகிறார் அண்ணா..
சரித்திரப்புகழுடன் விளங்குகிறார்!
எதையும் தாங்கும் இதயம் கொண்டு...‘அண்ணன்’
எங்களை வாழ்ந்திடச் சொன்னதுண்டு!




‘அண்ணன்’ அன்று நல்ல நல்ல கருத்து
அழகுத்தமிழில் சொல்லிசொல்லிக் கொடுத்து
வளர்ந்த ‘பிள்ளை’யடா...அதனால்
தோல்வி இல்லையடா!

பரம்பரை ரத்தம் உடம்பிலேதான்...அது
முறுக்கேறிக் கிடப்பது நரம்பிலேதான்!
கொடுப்பதைக் கொடுத்தா தெரியுமடா...உன்
இடுப்பையும் ஒடிச்சா புரியுமடா!

காலம்தோறும் குட்டக்குட்டக் குனிந்து
கொடுமைக்கெல்லாம் கட்டுப்பட்டுக் கிடந்து
நிமிர்ந்த கூட்டமடா...எதிர்த்தால்
வாலை நறுக்குமடா!



நீ எங்களை விட்டும்
இந்த மண்ணை விட்டும்
மறைய போவது இல்லை

1 கருத்து:

Unknown சொன்னது…

அவர் மண்புழு போல , பல துண்டுகளாக வெட்டினாலும் , அத்துனை துண்டுகளும் தனி .. தனி.. உயிர் பெற்று உயிர்த்தெழும்பும்....!!!


தலைவா... உன் வீரம்... உன் தாய் மண் .. உன்னை ஒருபோதும் சாய விடாது...!!!

Buy Book Online in India
TheStorez.com Online Bookstore