
சமீபத்தில் அவன் - இவன் படத்தின் பிரஸ் மீட்டில் இயக்குனர் பாலா பேசிய பேச்சை கேட்ட பொது கொஞ்சம் எரிச்சல் வரத்தான் செய்தது.அப்படி என்ன சொன்னாருனா
நான் பொதுவா VCD யில் படம் பார்க்க மாட்டேன் . ஆனா தியட்டரில் போய் படம் பார்க்கும் போது முக்கியமான காட்சியில் செல்போனில் ப்செயகிட்டு இருப்பாங்க இல்லனா SMS அனுபிகிட்டு இருப்பாங்க . அதலாம் பக்கும் போது அவங்களா அடிச்சுடுவேனோ என தோணும் .
இதுல என்ன இருக்குனு நீங்க நிறைய பேரு நினைக்கலாம்.என்ன பொருத்தவரைக்கும் இது வடிகட்டின முட்டாள் தனமான செயல் . சம்பளம் தரும் முதலாளியே போன் பேசின அடிப்பேன்னு சொல்லுறது கிடையாது . காசு குடுத்து ஒரு மொக்க படத்த பாத்துட்டு உன்கிட்ட அடிவாங்கனுமா.நீ படத்த நல்ல எடுத்தா அவன் ஏன்டா SMS அனுப்ப போறான் இல்லனா போன் பேச போறான் .
யாராவது படைபாளிக்கு கோவம் வருவது சாதாரணம் என சொன்ன நீங்க ஹோட்டல் போய் சாப்பிட போறிங்க.அங்க உள்ள அதே படைப்பாளி ஏன்டா நான் கஷ்டப்பட்டு தோசை சுட்டு தரேன் நீ பாட்டுக்கு அத ரசிச்சு சாப்பிடாம போன் பேசிகிட்டு சாப்பிடுறியே என சொன்ன உங்களுக்கு கோபம் வருமா வராத [ அது கூட நம்ப உடல் நலம் சம்பந்தம்பட்டது ] .நீ இப்படிதான் படம் எடுப்ப என தெரிஞ்சு தான் படம் பாக்க வராங்க அப்பவும் படம் பிடிக்காதவன் தான் என்ன செய்யணு தெரியாம இப்படி செயுறான் .இல்லன எதாவது முக்கிய விஷயமா பேசுவாங்க அப்படியும் இல்லனா நண்பர்களுக்கு படத்துக்கு போயிராத மச்சினு SMS அனுபிகிட்டு இருப்பாங்க .
ஏங்க பாலா இதேமாதிரி நாங்களும் படம் புடிகலனா உங்கள (ஹீரோ ,டைரக்டர் ,etc ) என்னவேனுனாலும் பண்ணலாமா ? படம் மொக்கையா இருந்தா நஷ்டப்பட போறது நாங்களும் ,தயாரிப்பாளரும் இன்னும் கொஞ்சபேரும்தான், நிச்சியமா நீங்க இல்ல பாலா.
பொங்கலுக்கும் தீபாவளிக்கும் ரிலீஸ் பண்ண என் படம் கரும்போ பட்டாசோ அல்ல. நான் நினைக்கும் வித்த்தில் படம் வந்தால்தான் ரிலீஸ் செய்வேன் என்கிறார் இயக்குநர் பாலா.
இது பாலா ஒரு பேட்டியில் சொல்லியது.அதே மாதிரிதான் நாங்க படம் பிடிச்சுருந்த பாப்போம் இல்லனா SMS அனுப்புவோம்.
எதுக்கும் இந்த பதிவ படிச்சுபாருங்க