வியாழன், 11 பிப்ரவரி, 2010
இயக்குனர் பாலா ஒரு ....?
சமீபத்தில் அவன் - இவன் படத்தின் பிரஸ் மீட்டில் இயக்குனர் பாலா பேசிய பேச்சை கேட்ட பொது கொஞ்சம் எரிச்சல் வரத்தான் செய்தது.அப்படி என்ன சொன்னாருனா
நான் பொதுவா VCD யில் படம் பார்க்க மாட்டேன் . ஆனா தியட்டரில் போய் படம் பார்க்கும் போது முக்கியமான காட்சியில் செல்போனில் ப்செயகிட்டு இருப்பாங்க இல்லனா SMS அனுபிகிட்டு இருப்பாங்க . அதலாம் பக்கும் போது அவங்களா அடிச்சுடுவேனோ என தோணும் .
இதுல என்ன இருக்குனு நீங்க நிறைய பேரு நினைக்கலாம்.என்ன பொருத்தவரைக்கும் இது வடிகட்டின முட்டாள் தனமான செயல் . சம்பளம் தரும் முதலாளியே போன் பேசின அடிப்பேன்னு சொல்லுறது கிடையாது . காசு குடுத்து ஒரு மொக்க படத்த பாத்துட்டு உன்கிட்ட அடிவாங்கனுமா.நீ படத்த நல்ல எடுத்தா அவன் ஏன்டா SMS அனுப்ப போறான் இல்லனா போன் பேச போறான் .
யாராவது படைபாளிக்கு கோவம் வருவது சாதாரணம் என சொன்ன நீங்க ஹோட்டல் போய் சாப்பிட போறிங்க.அங்க உள்ள அதே படைப்பாளி ஏன்டா நான் கஷ்டப்பட்டு தோசை சுட்டு தரேன் நீ பாட்டுக்கு அத ரசிச்சு சாப்பிடாம போன் பேசிகிட்டு சாப்பிடுறியே என சொன்ன உங்களுக்கு கோபம் வருமா வராத [ அது கூட நம்ப உடல் நலம் சம்பந்தம்பட்டது ] .நீ இப்படிதான் படம் எடுப்ப என தெரிஞ்சு தான் படம் பாக்க வராங்க அப்பவும் படம் பிடிக்காதவன் தான் என்ன செய்யணு தெரியாம இப்படி செயுறான் .இல்லன எதாவது முக்கிய விஷயமா பேசுவாங்க அப்படியும் இல்லனா நண்பர்களுக்கு படத்துக்கு போயிராத மச்சினு SMS அனுபிகிட்டு இருப்பாங்க .
ஏங்க பாலா இதேமாதிரி நாங்களும் படம் புடிகலனா உங்கள (ஹீரோ ,டைரக்டர் ,etc ) என்னவேனுனாலும் பண்ணலாமா ? படம் மொக்கையா இருந்தா நஷ்டப்பட போறது நாங்களும் ,தயாரிப்பாளரும் இன்னும் கொஞ்சபேரும்தான், நிச்சியமா நீங்க இல்ல பாலா.
பொங்கலுக்கும் தீபாவளிக்கும் ரிலீஸ் பண்ண என் படம் கரும்போ பட்டாசோ அல்ல. நான் நினைக்கும் வித்த்தில் படம் வந்தால்தான் ரிலீஸ் செய்வேன் என்கிறார் இயக்குநர் பாலா.
இது பாலா ஒரு பேட்டியில் சொல்லியது.அதே மாதிரிதான் நாங்க படம் பிடிச்சுருந்த பாப்போம் இல்லனா SMS அனுப்புவோம்.
எதுக்கும் இந்த பதிவ படிச்சுபாருங்க
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
13 கருத்துகள்:
நியாயமான கோவம்தான்... உங்கள்து
புரிந்து கொண்டதற்கு நன்றி
சும்மாவே நாங்க sms அனுப்புதில கில்லாடி .படம் வேற மொக்கை ஏன்டா என்ன பண்ணுறது
திரைப்பட உலகில் உள்ளவர்களில் சிலர் தாங்கள்தான் அதி புத்திசாலிகள் குணவான்கள் மற்றவர்களெல்லாம் முட்டாள்கள் என நினைத்து பல முறை பேசியிருக்கின்றனர். அதில் இதுவும் ஒன்று.
என்னைப் பொறுத்தவரைக்கும் படம் பார்த்துக் கொண்டிருக்கையில் ஃபோன் பேசிக் கொண்டிருப்பதோ,SMS அனுப்புவதோ தப்பான விசயம் கிடையாது,நம் பக்கத்தில் உட்கார்ந்து படம் பார்த்துக் கொண்டிருப்பவருக்கு இடையூறு இல்லாத வரை.
அவர் கூறியதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. திரையரங்கு என்றல்ல அனைத்து பொது இடங்களிலும் கூட மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் நடந்து கொள்கிற போக்கு நம்மிடம் சற்று குறைவுதான். திரையரங்கில் இம்மாதிரி நடைபெறும் இடைஞ்சல்களுக்கு பெரிய பட்டியலே போடலாம். நீங்கள் கூட ஏதாவது ஒரு சமயத்தில் அதை அனுபவித்திருப்பீர்கள். பக்கத்திலிருப்பவரிடம் சத்தமாக தொடர்ந்து உரையாடிக் கொண்டேயிருப்பது, தொலைபேசி வந்தால் அப்படியே அமர்ந்து உரத்த குரலில் பேசுவது, பிடிக்காத காட்சிகளுக்கு கூக்குரலிடுவது, மற்றவர்களின் அமைதியையு்ம் குலைப்பது.. நல்ல படமோ,மொக்கையோ, பலநூறுபேர் கொண்ட ஒரு குழு ஒரு படைப்பை உருவாக்கியிருக்கிறது. அதை அமைதியாக உட்கார்ந்து கவனித்து பிறகு தம்முடைய விமர்சனத்தை வைப்பதுதான் முறை. மேலும் சினிமா பார்ப்பது மாத்திரமல்ல, உள்வாங்கிக் கொள்வதும் ஒரு கலைதான். அதற்குரிய மரியாதையைத் தர வேண்டும். இந்த அடிப்படையில்தான் பாலா பொதுவாக சொல்லியிருக்கிறார். அந்த நோக்கில் இதைப் புரிந்து கொள்வது சரியாக இருக்கும். அவர்கள் எடுக்கும் படம் மொக்கையாக இருந்தால் அதை நிராகரிக்கும் எல்லா உரிமையும் உங்களுக்குள்ளது. அதுவேறு. இதுவேறு. இரண்டையும் சம்பந்தப்படுத்துவது சரியி்ல்லை என்றே கருதுகிறேன்.
பெயரிலியின் கருத்தே என்கருத்தும்.உங்களுக்கு அது மொக்கைப் படமாக இருக்கலாம். உங்களைச் சுற்றியிருப்போருக்கு அதுவே உலகத் தரமாக இருக்கலாம். அவர்களைத் தொந்தரவு செய்யும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது.
இந்த நாடுகளிலும் மொக்கைப்படம் உள்ளது. தவறி வந்தோர் ,வந்த சுவடு தெரியாது போய் விடுவார்கள்.
ஆனால் நம் நாடுகளில் திரையரங்குகளில் நடக்கும் அட்டகாசம்; மனச்சாட்சியுடன் சொல்லுங்கள்.
சகிக்கக் கூடியதா?
நமக்குக் கையை ஆட்டும் உரிமை; அடுத்தவர் மூக்கு நுனிவரை மறக்கக் கூடாது
அப்படியில்லீங்க!சிவாஜி படம் முதல் நாள் போனபோது பக்கத்து சீட்டுக்காரர்,முன் சீட்டுக்காரர் போன்ல பிலிம் காட்டி...இல்ல சிவாஜிய புடிச்சிகிட்டு இருக்காரு.டூரிங் டாக்கிஸ்ல விளம்பரம் போட்டாலே படத்த போடுன்னு விசில் அடிக்கிற கூட்டத்துல இருந்து வந்தவங்கண்ணா நாம.....கவனம் சிதறுவது கோபத்தையே உருவாக்கும் அதுவும் ஒரு படைப்பாளிக்கு நிச்சயமாக.
இடம்,பொருள்,ஏவல்ன்னு என்னமோ சொல்லுவாங்க அல்லவா?
இது நல்லாயிருக்கே உங்களுக்கு பிடிக்காத படம் உங்களுக்கு அருகில் அமர்ந்து பார்ப்பவர்களுக்கு பிடிக்கலாம். உங்களுக்கு பிடிக்கலைன்னா தியேட்டரை விட்டு வெளியே வந்து மெசேஜ் அனுப்புங்க, கால் பண்ணுங்க ங்கோ.... என்ன படம் எடுத்திருக்கான்னு கத்துங்க அது விட்டுட்டு படம் பார்க்கும் மற்றவர்களை தொந்தரவவு படுத்துபவர்களை கண்டால் எனக்கும் நல்ல கண்ணம் பளுக்க நாலு அறை கொடுக்கலாம்ன்னு தான் தோனும்.
Bala is cracky person .He always talk like this.He beaten Ajith on a problem .i saw on that nes through news papers.
Some cracks think they only genious in the world like bala
அந்தாளு சொன்னத நீங்க ரொம்ப தவறா புரிஞ்சுக்கிட்டீஙக்..."முக்கியமான காட்சி போய்க்கிட்டு இருக்கும்....." இதுதான் அவரு சொன்னதுல முக்கியமான இடம்...
சேது படத்துல விக்ரம் அபிதாகிட்ட காதலை சொல்ற சீன் வரும்போது....சட்டுன்னு ஒங்க பக்கத்துல இருக்குறவரு...."என்னாடா..." அப்படீன்னு சத்தம் போட்டு செல்லுல பேசினா என்ன நினைப்பீங்க....அதே கோவம் தான் அந்தாளுக்கும்....
இந்த பேச்சுல அந்தாளு....இன்னொரு உள்குத்தும் வச்சிருகான்னு நினைக்கிறேன்....
half boiled article
Half Boiled article
கருத்துரையிடுக